ஆண்

உன்னன்பு கிடைக்கதிருந்தால்
உண்மையான அன்பைத்தேடியே
என் வாழ்நாள் ஓடியிருக்கும்...
பெண்ணென்ற போர்வைக்குள்
அன்பொன்று மட்டுமல்ல,
ஆளுகையும் ஒளிந்திருப்பதை
அறிந்திருந்தவன் நீயல்லவோ...
தோல்வியைக்கண்டு துவண்டுபோகையில்
தோள்கொடுத்து தட்டியெழுப்பி
தோல்வியை தோற்கடிக்கும்
வித்தையை கற்றுக்கொடுத்தாயே...
பூச்சரம் தொடுக்கும் கரத்தில்
துப்பாக்கி ஏந்தி நிற்கவும்,
அரியணையில் அமரவும்,
ஆட்சி பல புரியவும்,
இமயம் தொடவும்,
நிலவில் தடம் பதிக்கவும்,
விமானத்தை கையாளவும்
எவ்விடத்திலும் பெண்ணென்பவள்
முன்னிற்க நிச்சயமாக
ஓர் ஆணின் உறுதுணையோ,
ஊக்கமோ தான் காரணமென்பதை
சாதித்த பெண்கள்
சல்லியளவும் மறுக்க முடியாது...
ஆணென்பவன் பலபரிணாமத்தில்
பெண்கள் எங்களுக்கு முதுகெலும்பே...

எழுதியவர் : சுபா பூமணி (7-Mar-14, 5:44 pm)
பார்வை : 66

மேலே