மகளிர்தின வாழ்த்துக்கள்
அம்மாவும் நீயே
அத்தையும் நீயே
அன்புடனே தாலாட்டும்
அக்காவும் நீயே
பாசம் காட்டி ஊட்டும்
பாட்டியும் நீயே
பொக்கை வாயில் சிரிக்கும்
பூட்டியும் நீயே
அண்ணனைப்போல் அரவணைக்கும்
அண்ணி அல்லவா
அண்ணியவள் தங்கை
அந்தகொழுந்தியும் நீயல்லவா
உறவுமுறை மாறிடினும்
உன்னிடத்தில் ஓடுவது தாய்மை அல்லவா
ஒருகோடி கொடுத்தாலும்
உன்னன்புக்கது ஈடாகுமா
அன்னையே வாழ்த்துகிறோம்
அகிலமே வாழ்த்துகிறோம்
தோழியே வாழ்த்துகிறோம் -முகநூல்
தோழமையே வாழ்த்துகிறோம் .