தியாகம்-6

இரண்டு வருடங்களுக்கு பிறகு...........!


தன்யாவிற்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தான்., பெயர் தாரன்......... மாப்பிள்ளை மிகவும் நல்ல குணம் என அனைவரும் போற்றினர்.,........ அது உண்மை தான்.,
இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் இவனுக்கு ஈடு யாரும் இல்லை., கொடை வள்ளல்! தாரன் தன் அம்மா பெயரில் ஒரு பெரிய அநாதை இல்லம் நடத்தி வந்தான்.....!அதில் உள்ளதோ ஆயிரம் ஆயிரம் சிட்டுகள்.,!
இன்று அப்படி பட்ட குணவாலனுக்கும், தன்யாவிற்கும் நிச்சய ஏற்பாடு பிரமாண்டமாய் நடந்து கொண்டிருக்கும் வேலையில்.,............
பாரதி தன் காதலனை யாருக்கும் தெரியாமல் வருவித்து இருந்தாள்., கண்களால் இருவரும் கவி பாட ., அவன் அடுத்து நம்ம நிச்சயம் தான் என்று அவன் கூற., பாரதி முகம் வெட்கத்தில் சிவந்தது.....!
தன்யாவின் திருமண தேதி இன்னும் பத்து நாட்கள் என்று ப்ரோகிதர் பத்திரிகையை வாசித்தார்.....! இப்பொழுது மணமக்கள் மோதிரம் மாற்றி கொள்ளலாம் என அறிவித்தார்........!
தன்யாவின் கரம் பிடித்து தாரன் மோதிரம் மாற்ற, தன்யா தன் முகத்தில் எல்லை இல்லா சந்தோசத்தை காட்டினாள்., இருவரின் காதலும் தொலைபேசியில் ஆரம்பம் ஆனது.,......
தன்யா தாரனிடம் பேசும் போதெல்லாம், இப்படி ஒரு மனிதனா என அதிசயத்து தான் போனாள்., நிச்சயமாக நம் வாழ்வு சோடை போகாது என்று உறுதியாக நினைத்தாள்., தன் வருங்கால வாழ்கையை வயோதிக பருவம் முதல் நினைத்து கோட்டை கட்ட தொடங்கினாள்.,
வர போகும் பெரும் சோகம் அறியாமல்.,

தொடரும்.,...........................

எழுதியவர் : elakkiyam (7-Mar-14, 7:32 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 136

மேலே