இனியா நான் என்னாக் கேனையா பாகம் 1
இனியா..... இனியா..... ! இனிக்க இனிக்கப் பேசி இனிப்பான வாழ்க்கத் தந்து, இன்னிக்கி எந்த ரோட்டுல நான் உன்னே என்னக் கட்டிக்கிறியானு கேட்டேனோ அதே ரோட்டுலத் தனியா; இப்படி எல்லாரும் பார்க்கற மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கறேன். மத்தவங்க பார்க்கறாங்கன்னு தெரிஞ்சும்.
ஹலோ !! ஹலோ !! இங்க இங்கங்க ! நான் உங்க கிட்டத் தாங்க பேசறேன். நீங்கத்தானே இந்தக் கதையப் படிக்கறீங்க. அப்போ உங்கக்கிட்டத் தான் பேசணும். பேசணும்ங்கறத விட சொல்லனும். ஒன்னு ஒன்னா சொல்லனும். என் இனியா அவ யாரு ? எனக்கும் அவளுக்கும் இருக்கற , அதாவது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த, AND இப்போ இல்லே ! இல்லாத அந்த உறவு ! இதப்பத்திலாம் சொல்லனும்ங்க. உங்கக்கிட்ட. சொல்லியே ஆகணும்.
எனக்கு இந்தக் கதையெல்லாம் சரி வரச் சொல்லத் தெரியாதுங்க. பாட்டி வடை சுட்டக் கதையவே எனக்கு ஞாபகம் வெச்சிக்க 6 மாசம் புடிச்சதுனாப் பார்த்துக்கோங்க. SO, நான் சொல்லப் போரக் கதை அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். சரியா ?!
இதுக்கு மேலே இதுத் தேறாதுன்னு நீங்க நெனச்சிங்கன்னா இங்கையே இப்பவே இதோடு முடிச்சிக்கோங்க. விருப்பம் இருக்கறவுங்க மட்டும் மேலப் படிங்க.
சரி நான் என் இனியாவுக்கு வரேன். இல்லே ! இல்லே ! நான் யார்னே இன்னும் சொல்லலத்தானே ?!
நான் சிவாங்கா. என் வயசு..... வயசு தெரிஞ்சு நீங்க பொண்ணுக் கொடுக்கப் போறதும் இல்லே ! அப்பறம் ஏன் அது தேவை இல்லாம. சரி அதை விடுங்க. இந்தா சிவா இருக்கானே ! அதாங்க நானு... பெரிய IT மேதாவிங்க ! சும்மா சொடக்கப் போடற GAPல PCல என்னப் பிரச்சனையா இருந்தாலும் சும்மா டக்கு டக்குனு SOLVE பண்ணுவேன்.
ஆனாப், பாருங்க PCக்கேல்லாம் பிரச்சனைனா நான் ஓடுவேன். இப்போ என் வாழ்கையே பிரச்சனையாகிப் போய்க் கிடக்குது ! இதுக்கு யாருங்க ஓடறது ? யார நான் துரத்தி விடறது ஒடுங்கன்னு ? நீங்களேச் சொல்லுங்க ?
தொடரும்

