இனியா நான் என்னாக் கேனையா பாகம் 2

அப்படி என்னாங்க குறை எனக்கு ? சும்மா இல்லைங்க நான் ஆளு பார்க்க சிவப்பா கொஞ்சம் வாட்ட சாட்டமா இந்த தெலுங்குப் படம் ஹீரோ, அதாங்க பிரபாஸ் மாறி இருப்பேன். அதாங்க, மழை படம் இருக்கில்லே அதோடு தெலுங்கு ரீமேக்லே த்ரிஷக் கூட நடிச்ச அந்த ஹீரோத்தாங்க அந்த பிரபாஸ். நானும் அவன அச்சடிச்ச மாதிரித் தான் இருப்பேன்.

நீங்க நம்பறிங்களோ இல்லையோ. ஆனா, சத்தியா அடுத்து நான் சொல்லப் போறதக் கேட்ட நிச்சயம் நீங்க காரிக் கூடத் துப்பலாம். கடுப்பாயி என்னைக் கெட்ட வார்த்தையால மட்டும் திட்டிராதிங்க ! சொல்லிட்டேன் ! ஆமா, எனக்கு பாம்பு காதுங்க ! அப்பறம் தேவை இல்லாம உங்களுக்கும் எனக்கும் மாட்டும் ! சரி இதெல்லாம் விடுங்க.

இப்போ வரேன் என் கதைக்கி. இனியாங்க.... அதான். என் இனியா. அவ இருக்காளே.... ப்பா….சும்மா தக்காளிப் பழக் கலருல சும்மா தள தளன்னு அப்படித் தாங்க இருப்பா. சிரிச்சா பாருங்க அப்படியே புன்னகை அரசி சினேகா மாதிரி அம்சமா இருப்பா. அவ கண்ணு இருக்கே கண்ணு அடடடடா…. அந்த முண்டக்கன்னியோட பார்வையே பார்வத்தாங்க. என்னாப் பார்வங்க சொன்னா நம்ப மாட்டிங்க அந்தப் பார்வையாலத்தாங்க நானும் அவளும் MEET UPபே பண்ணோம். அந்தக் கதையும் கொஞ்சம் கேளுங்க. அது செம்மக் கதைங்க.

இருங்க ! இருங்க ! ஏற்கனவே இந்த MEET UPக்கு முன்னாடியே நான் அவள எங்கப் பார்த்தேன்னு FIRST சொல்லிடறேன் ஒகே வா ?! என்னங்க ரொம்ப சொதப்பறனா ? சோரிங்க ! நான் தான் முன்னமே சொன்னேனே எனக்கு கே.எஸ். ரவிக்குமார் , ஷங்கர் , செல்வராகவன் மாதிரிலாம் கதைச் சொல்லத் தெரியாதுன்னு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. பிளிஸ்.

நான் நெனைக்கறேன் இந்த இடத்தோட வாஸ்த்து சரி இல்லேன்னு. நாமே கொஞ்சம் அந்தப் பக்கம் போவோமே. எந்தப் பக்கம், என்னா இடம் இதானே உங்கக் கேள்வி. இருங்க சொல்றேன். நான் பினாங் SECOND BRIDGEல நின்னுக்கிட்டுதாங்க உங்க கிட்ட என் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கேன். வடப் பக்கத்திலிருந்து அப்படியேக் கொஞ்சம் நடந்துக்கிட்டு இப்போ இடப்பக்கத்துக்குப் போய்க்கிட்டு இருக்கேன். நான் நடந்துக் கிட்டே கதை சொல்றேன் நீங்க கேளுங்க.


தொடரும்

எழுதியவர் : தீப்சந்தினி (7-Mar-14, 8:22 pm)
பார்வை : 189

மேலே