சில்கள்

வருடம் வருடமாய்
நம் உருப்படியாய்க் கிழிப்பது
நாள் காட்டியை மட்டும் தான் !
*
தோலுரிக்கத் தோலுரிக்க
என் வீட்டின் தேய்பிறை யானது
நாள்காட்டி !
*
கரையக் கரைய
நிறைக்கிறான் எழுத்தை
இவன் பென்சில் வீரன் !
*
புரட்டப் புரட்டப்
புதுப் புது கோலம்
புத்தகம் !
*
பரவசம் தருக
பேனா முனையே
கவிதையின் பெயரில் !
விவேக்பாரதி