நகைச்சுவை
நகைச்சுவை!
கவலைகளை மறக்கச் செய்யும்!
ஆக்க சக்தியை புதுப்பிக்கும்!
சோதனைகளின் அதிர்வுகளால்
உள்ளத்தில் பூகம்பம் வராமல்
சாதனைகளின் நம்பிக்கைகளால்
உற்சாக மின் அதிர்வுகள் தந்து
சுற்றி இருப்போர்க்கும்
வெற்றி இசை இசைக்கும்!
சிந்தனையைப் பண்படுத்தி
தீர்வுகளைச் சொல்லும்!
நிந்தனையல் மற்றவரைப்
புண்படுத்தும் குணம் நீக்கும்!
எனவே
சிரிப்போம் சிரிக்க வைப்போம்!
வாழ்வோம் வாழவைப்போம்!