உலக மகளிர்க்காக
பெண்கள்...
நாங்கள் நாட்டின் கண்கள் தான்..
இமையாக நீங்கள் இருக்கும் வரை...
நாங்கள் நாட்டின் சக்தி தான்
ஊக்கமாக நீங்கள் உடன் நிற்கும் வரை...
நாங்கள் உங்களின் பாதிதான்
பதி நீங்கள் யாவும் பகிர்ந்தளிக்கும் வரை...
இந்நாளில் மட்டும்
உச்சாணியில் நிறுத்தி விட்டு...
மிச்ச நாளில் பரணில் போடாமல்...
சிறுமியே என்றாலும் சிறுமை படுத்தாமல்...
கன்னியே என்றாலும் கண்ணியமாய் பார்த்து...
பெண்ணவள் தாயென்றால் தயை காட்டி...
மூத்தவள் முதிர்ந்தவள் எனில் முகமன் கூறினால்...
நாங்களும் அகம் குளிர்வோம்...
உங்களின் ஆராதனை தேவை இல்லை...
அனுசரணை போதும்...
தோள் சுமக்க தேவை இல்லை...
தோள் கொடுத்தால் போதும்...
புரிதல் மட்டுமிருந்தால்
வேறு பரிசுதான் தேவையென்ன...
உலகத்தின் உச்ச பட்ச வலி தாங்கியவளுக்கு
நீங்கள் சூது,மது, மாது விலக்கினால் போதும்...
உலகமே அழகாகும்...
நடு இரவில் பெண்ணொருத்தி
பயமில்லாமல்
தனியே நடந்து போகும் ...
சுதந்திர இந்தியாவின்
காந்திய கனவு
என்றேனும் ஒரு நாள் ...
இந்தியாவில் மட்டுமின்றி,
உலகெங்கும் நிறைவேறும்...
என்றே நாமும்
கனவு கண்டு காத்திருப்போம்...
கனவு கண்டு காத்திருப்போம்...
கண் விழித்தும் பார்த்திருப்போம்...
கண் விழித்தும் பார்த்திருப்போம்...