மகளிற்கு அர்ப்பணம்

உன்னால் சுவசிக்கப்பட்ட காற்று
====உயிர் தந்தது எனக்கு .
உன்னால் உண்ணப்பட்ட உணவும்
====உதிரமானது எனக்கு

உன்னுதிரத்தில் சுரந்த பால்
====உணவானது எனக்கு
உன்னகதில் பிறந்த சுரம்
====உறவானது எனக்கு

பெண்ணாக பிறந்ததினால்
====பேருலகை படைத்திட்டாய்
பெண்ணென்ற உறவுக்குள்
=====ஆண் என்னை அடக்கி விட்டாய்

அம்மா அக்கா தங்கையென
=====அத்துணை உறவையும்
அம்மா எனக்கு தந்து விட்டாய்
======அன்பு மகளாய் அவதரித்தாய்

மகளிர் தினமிதை மறந்திடுவோமா
======மலரைப் போலுன்னை மதித்திடுவோமே
மகளாய்ப் பிறந்த மகளிரெல்லாம்
======மனித உறவின் மாவுயிரே

எழுதியவர் : படைகவி பாகருதன் (8-Mar-14, 7:38 pm)
பார்வை : 1899

மேலே