அப்புவின் சந்தேகம் முடியவில்லை

அப்புவின் சந்தேகம் .. முடியவில்லை

அம்மா

என்னடா

இன்னிக்கி ஸ்கூல்ல ஆமையும் முயலும் கதை சொல்லித்தந்தாங்க

ஓ .. அப்படியா

ஆமாம். உனக்கும் ஸ்கூல்ல சொல்லித் தந்தாங்களா

ஆம்மாண்டா செல்லம்

அப்பவும் கூட ஆமைதான் தான் ஜெயிச்சுதா அம்மா

இந்த கதையிலே எப்பவும் ஆமை தான் ஜெயிக்கும்

ஆமை மெல்லத் தானே நடக்கும் .. ஆனா முயல் துள்ளித்துள்ளி போகுமே அம்மா. அது தூங்காம இருந்தா ஜெயிசிருக்கும் இல்லையா அம்மா

ஆமா.. ஆமா.

அம்மா ஒரு கேள்வி கேக்கட்டுமா

கேளுடா

பதில் சொல்லணும்

சொல்லறேண்டா

ஆமை எப்போ அம்மா வேகமா போகும்

ஹூம் .. ஆமை வேகமா போகாது. மெல்லத் தான் போகும்

இல்லை அம்மா .. ஆமா வேகமா போகும்

எப்போ

ப்லேன்ல போனா

எழுதியவர் : (9-Mar-14, 10:08 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 131

மேலே