பிள்ளையைப் பெற்றால் - வானொலி நாடகம்
![](https://eluthu.com/images/loading.gif)
எழுந்திரும்மா. . எதுக்கு காலில் விழுந்துகிட்டு.
எனக்கு இதில் எல்லாம் உடன் பாடு இல்லை.
இல்லைங்க. . முதலிரவு அன்னைக்கு மனைவி கணவன் காலில் விழுந்து வணங்குவது நமது சம்பிரதாயம். .
என்ன.சம்பிரதாயம். . நீ பாதி நான் பாதி. இதுதான் என் கொள்கை. இனிமேல் நமக்குள் இப்படி பேதமை எல்லாம் வேண்டாம் .
******** ********
என்னங்க வயித்துல கையை வச்சுப் பாருங்க. நம்ம பையன் என்னமா உதைக்கிறான்.
அது என்னடி உதைக்கிறான். . உதைக்கிறாள் என்று சொல். . எனக்கு உன் சாயலில் மகளைப் பெற்றுக் கொடு.
அது இல்லீங்க. நீங்க வேலைக்குப் போயிருக்கும் போதும் நீங்க என் பக்கத்துலயே இருக்கிற மாதிரி உங்க பையன் உங்க சாயலில் எனக்கு வேணும். உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. .
******** ********
மிஸ்டர். . உங்களுக்கு ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கு.ரெண்டுமே ஆண் குழந்தை. .
நன்றி டாக்டர். . நான் என் மனைவி குழந்தைகளைப் பார்க்கலாமா. .
நோ. . நோ. . .மயக்கத்துல அதுவும் ரொம்ப டயர்டா இருக்காங்க. அரை மணி நேரம் கழிச்சு மயக்கம் தெளிஞ்சுடும் . அப்புறம் போய் பாருங்க.
******** ********
என்னங்க . . . வாங்கிட்டு வந்த உடனே பார்சலை அப்படியே பிள்ளைகளுக்கு கொடுத்துட்டீங்களே.உங்களுக்கு மிச்சம் வைக்காம அவங்களே காலி பண்ணிடுவாங்க.
போடி . . அசடே. . பிள்ளைங்க சாப்பிட்டா நாம சாப்பிட்ட மாதிரி. தொண்டைக்கு கீழே போனால் நரகல். . நமக்கு ஏதுக்கடி பண்டமும் பலகாரமும்.
********* *********
என்னங்க பசங்களுக்கு நல்ல படியா வேலை வாங்கி கொடுத்து கல்யாணமும் முடிச்சுப் பார்த்துட்டோம்.இப்படியே சுமங்கலியாப் போய்ச் சேர்ந்துடனும்னு ஆண்டவன்ட வேண்டிக்கிறேன்.
அடி . . இவளே. . நல்லா வாயில ேதாச்சும் வந்துடப் போகுது. அது என்னடி அவசரம் பேரன் பேத்தியைக் கொஞ்ச வேண்டாமா. இனிமேல் இப்படி எல்லாம் பேசினேன்னால் என் மனசு தாங்காது. சொல்லிப் புட்டேன் ஆமா. . .
******** ********
ஏம்பா.. . . அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா.
பஸ்சுக்கு அண்ணனிடம் கேட்க வேண்டியதுதானே.இருக்கிற கஷ்டத்துல நானும் என் குடும்பமும் எவ்வளவு கஷ்டப் படுறோம். .
அண்ணனும் இதைத் தான்டா சொல்லுறான். . நீயும் இப்படிச் சொன்னால் எப்படிடா. . ஒரு நல்ல டாக்டரிடம் கூட்டிப் போலாமடா. .அம்மாவைப் பார்த்தால் எனக்கு செத்துடலாம் போல இருக்குடா.
போய்ச் சேர வேண்டியதுதானே. ரெண்டு பேரும் இனி வாழ்ந்து என்ன சாதிக்கப் போறீங்களாம். .
******** *******
இரு தரப்பு வாதங்களையும் கேட்டு இந்த நீதிமன்றம் பெரியவர் மூத்த மகன் வீட்டிலும்
அந்தம்மா இளைய மகன் வீட்டிலும் இருக்க வேண்டும் எனவும் இருவரையும் நல்ல படியாக இறுதிக் காலம் வரையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடுகிறது. .
ஏம்பா. . . ஓடி வாங்க. . .பெரிசுங்க ரெண்டும் ஒண்ணுபோல செத்துடுச்சின்னு நினைக்கிறேன். .
அடப் பாவிங்களா. . இவங்களை பக்கத்துல பக்கத்துல அடக்கமாவது பண்ணுங்க. . .
*-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*