நம்பிக்கை

வலுவிழந்து போகவில்லை இன்னும்
கனவுகளை மீட்டுவரும் எண்ணம்
காலங்கள் கடத்திச்சென்றது கொஞ்சம்
அடிநெஞ்சில் உறங்குகிறது மிச்சம்
ஊரார் உமிழ்ந்திடலாம் இன்று
உயர்ந்தால் ஒளிந்திடுவார் அன்று
வீழ்ந்தே கிடப்பதல்லை வேங்கை
அடித்தால் அழிவதில்லை வேட்கை
இமயம் நமக்கு கீழே வா
கடலும் கங்கை என்றே வா

எழுதியவர் : ஹரேந்ரா (9-Mar-14, 11:40 am)
சேர்த்தது : ஹரேந்ரா
Tanglish : nambikkai
பார்வை : 99

மேலே