சில்கள்

பெண்ணிடம் காதல் பட்டால்
சாவது நிச்சயம்
என்பது உண்மைதான் போலும்
சாய்கிறான் நிலாவைக் கண்டதும்
பொன்மாலைச் சூரியன் !
*
யார் மூட்டிய நெருப்போ
விறகில்லாமல் எரிகிறது
சூரியன் !
*
நம்மைப் போல்
சூரியனுக்கும் இருட்டு பயம்
அதனால் தான் ஓடுகிறான்
இரவைக் கண்டதும் !
*
நிலத் தாயின்
ஆடைகள் மறைத்த
மேடைகள் தானோ
இந்த மலைகள் ?
*
நிலத்தாயின் அங்க
மேடைகள் வழி
ஒழுகும் பால்தானோ ஆறு ?
பிள்ளைகள் நம் பசி தீர்க்க ?

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (9-Mar-14, 11:41 am)
பார்வை : 120

மேலே