எழுதி மறந்த வரிகள்

நான் எழுதி வரிகளே
மறந்து போகின
தமிழே
உன்னைக் கொண்டு
நான் எழுதிய வரிகள்
மறந்து போகின

மழை(லை) ஊற்றாய்
நீ ! இங்கிருக்க்
உன்னில் பெருக்கெடுத்த
நதிகள் எங்கு சென்றுவிடும்
நிச்சயம்
விதையை விருட்சமாக்க
தான் சென்றிருக்கும்
நான் எழுதிய வரிகளும் தான்

மறந்தால் அன்று
எனக்கு மரணம் தான்
நான் எழுதிய வரிகளை அல்ல
வரிகளை வாரி வழங்கிய
உன்னை மறந்தால்
தமிழே
அன்று எனக்கு மரணம் தான்

என்னை மறந்தாலும்
உன்னை மறக்கமாட்டேன்

மறைந்தாலும் உன்னில்
மறைவேன்.....

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (8-Mar-14, 6:39 pm)
பார்வை : 158

மேலே