அவன் யாரென்று தெரிந்ததா-வித்யா

அவன் யாரென்று தெரிந்ததா.....?-வித்யா

காற்றினும் மேலான
அழுத்தம்......
கடலினும் மிகுந்த
ஆழம்,,,,,,,,,
மலையினும் மிக்க
உயரம்........

எவ்வழியில் கொன்றாலும்
அவ்வழியே உயிர்த்தெழுகிறான்
அவன்........

ஒருநாள் கோபம்
கொண்டு,
பெட்டியில் அடைத்து
சாவியை தொலைத்து
கடலில் வீசிவிட்டேன்.......!

என்ன
அதிசயம்.....
அரிசிப்பருக்கை தூக்காத
எறும்பு ஒன்று
பெட்டியை தூக்கி வந்து
என் முகத்தில் ஏறிந்தது.....!

திறந்தால் என்ன நேருமோ
என்ன செய்வானோ
என்று பயந்து

மீண்டும்
அந்த கொடும் பாவியை
அதல பாதாளத்தில்
புதைத்து வைத்தேன்.........!

காற்று கண்ணீரோடும்
ஏளனச்சிரிப்போடும்
என்னிடம் வீசி விட்டு
சென்றது.............!

தூர தேசம் தேடிச்சென்று
தொலைத்து விட்டு
வந்தேன்,
அந்த கொலைகாரனை......!

கொளுத்து போன
புறாவொன்று
தூக்கி வந்து
போட்டு சென்றது
என் முன்னே........

என்ன செய்வேன்.......?
விரக்தியிலும்
பயத்திலும்
பெட்டியை வெறித்து
நோக்கியபடியே.....நான்......

வாய் திறந்து
பல் தெரிய
பெட்டி சிரித்துகொண்டே.......

துரத்துகிறேன் பேர்வழி
எனை தூக்கி எரிகிறேன்
பேர்வழி.......
என்று துரத்திக்கொண்டே
துணை வருவது
நீயே.......
நானில்லை.....!


எனக்கும் உன்னோடு
இருந்து அலுத்து விட்டது
தயவு செய்து விட்டுவிடு
என்று அவன் கேட்க.....

ஒருகணம்
உலகம் மறந்து
விட்ட என்னை, நானே
கிள்ளி பார்த்துக்கொண்டேன்

என்ன செய்ய வேண்டும்
என நான் வினவ.....
ஒருமுறை புன்னகைத்துவிடு
இன்றைக்கு இதுபோதும்
என்று கூறி.........
ஓடியே போய்விட்டான்
அந்த படுபாவி....................!

என்ன அவன் யாரென்று
தெரிந்ததா.............!



முடிந்தால் புன்னகையோடு
கண்டு பிடித்து கூறுங்கள்
தோழமைகளே.............................!






முடியவில்லையா...........
அவன் வேறு யாரும் இல்லை
என் கவலைகள் தான்........!

enjoy your presence of mind ............
DONT WORRY ............
BE HAPPY .......

எழுதியவர் : வித்யா (9-Mar-14, 2:04 pm)
பார்வை : 252

மேலே