ஓடிவந்தவள்
பத்தொன்பது ஆண்டுகளாய்
பரிதவிக்கிறேன்
பரிகாரமின்றி....
வேற்று மொழி
மாற்று சாதி
பையனோடு காதல் கொண்டு
பெற்றோர் எதிர்ப்பு கண்டு
ஓடிவந்தேன் காதலனோடு
காவல் நிலைய விசாரனையில்
காதலனை கைபிடித்தேன்
கண்ணீர் விட்டு கதறிய
என் தாயின் அழுகை
வெட்கி தலை குனிந்த
என் தந்தையின் கெளரவம்
காரித்துப்பிய ஊர்,உறவுகள்
எதுவும் எனக்கு
பெரிதாய் படவில்லை
காதலில் வென்ற செறுக்கில்
பீடு நடை போட்டு சென்றேன
கால மாற்றத்திலும்
என் பெற்றோர் மாறவில்லை
கொண்ட பகை தீரவில்லை ்
இன்று வரை நம்பவில்லை
நானா இப்படி செய்தேன் ?
ஓடிப்போக துணிவு
வந்த எனக்கு
போராட ஏன் துணிவில்லை?
குப்பை என பெற்றோரை
தூக்கி எறிந்தேனே?
பெற்ற கடன் வளர்த்த கடன்
அனைத்தையும் மறந்தேனே!
இன்று அன்னையாய் நான்
பதினெட்டு வயது மகள்எனக்கு
அன்று நான் செய்ததை
இன்று என் மகள் செய்திடுவாளோ?
உறக்கமின்றி தவிக்கின்றேன்
என் தாயுள்ளம் புரிகின்றேன்
அவள் கண்ணீர் பலித்திடுமோ?