முயற்சி திருவினையாக்கும்

முன்னோக்கி முதலடி வைத்தால்
முடிவினை தொடலாம்
ஓரிடமாக இருந்தால்
எதை தான் பெறலாம்

நீ வைக்கும் ஒவ்வோர் அடியும்
ஒவ்வொரு படியாகவும், ஒவ்வோர்
படியும் உன் வழியாகவும் மாறும்

தடுக்கி விழுந்தாலும் முடங்கிடாதே
முயற்ச்சி எடுத்த காரியத்தில்
மணம் தளர்ந்தும் விடாதே

திருகிவிட்ட விசையைப் போல்
ஏவி விடப்பட்ட அம்பை போல்
முயற்சியை நிறுத்து இலக்கினிலே

உயரத் தெரியும் நிலவது
உறுதியுடன் நீ இருந்தால்
உன் உள்ளங்கையில் உறவாடும்

விடா முயற்ச்சியுடன் தூக்கம்
தொலைத்து சிட்டுக்குருவியாய்
சிறகு தட்டி பறந்து செல்...

நிஜங்களின் உறுதிக்காய்
நிவர்த்தி தேடுகையில்
நிழல்களின் ஆதிக்கம் தடையிடும்

திசைகளெட்டும் திறந்துள்ளது உனக்காக
அனலாய் தகிக்கும் திறமையை
திடமாய், தொளிவாய், திட்டமிடு

ஆயிரம் தடைகள் அரங்கேரி
நின்றாலும் ஆக்கும் செயலை
நீ அறியனையில் ஏற்றிடு

முன்னிருக்கும் ஒருவரையும் முட்டாளென
என்னாதே, முன்டியடித்து முன் செல்ல
முயற்சி ஒன்றே கைகொடுக்கும்

முரண்பாட்டு வாழ்க்கையிலே
முடியாதென்ற சொல்லே
முட்டுக்கட்டை இட்டுவிடும்

தோல்வி தரும் வலியை விட
தோற்றுவிடும் என்ற என்னமே
அதிக வலியைத் தரும்

இது நாள் வரை உனது பயணம்
சோம்பேறியாக அமைந்திருக்கலாம்
இதன் பின்னர் உனது பயணத்தை

சூரியனை நோக்கி செலுத்து
ஏனெனில் சூரியனுக்கு சென்றவர்
இங்கு எவருமே இல்லை...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 10:01 pm)
பார்வை : 4299

மேலே