செல்லச் சிட்டுக்கு நன்றி நன்றி
சிற்றெறும்பின் சுறு சுறுப்போடு
சிட்டுக்குருவியின் துடி துடிப்போடு
சிறகடித்துப் பறந்து வருபவளே !
சிலிர்த்தேன் நின் வாழ்த்தால் ...!!
காட்டிய அன்பில் கரைந்தேன்
கட்டிய கவியில் நெகிழ்ந்தேன்
கனிவாய் உந்தன் வாழ்த்தில்
கவிக்குயிலே நானும் மலர்ந்தேன் !!
வாசித்து விழிநீர் சொரிந்தேன்
வாழ்த்தில் நெஞ்சம் சிலிர்த்தேன்
வாழ்வில் நற்பேறு பெற்று
வாடா மலரே வாழ்க ...!!
சொர்க்கமாம் எழுத்து தளத்தில்
சொக்க வைத்தாய் சித்திரமாய் !
சொல்லடுக்கி கவி வடித்தாய்
சொர்ணமாய் என்றும் ஒளிர்வாய் ....!!