+எங்கெங்கு காணினும் பெண்களடா+

எங்கெங்கு காணினும் பெண்களடா - அவர்
எங்கெழுக் கிட்டிய கண்களடா

நானிலம் போற்றிடும் சக்தியடா - அவர்
வானினை எட்டிடும் புத்தியடா

அன்பினால் சாதிக்கும் ஆற்றலடா - அவர்
பண்பினால் வரும்நல்ல மாற்றமடா

அடிமைத் தனம்விட்டு ஆளவந்தார் - அவர்
வறுமை ஒழித்திடும் கல்விகொண்டார்

எட்டாத விண்வெளியும் தொட்டுவிட்டார் - அவர்
தேசம்காக்கும் வலிமைதனை பெற்றுவிட்டார்

சோதனை காலம்தனை தாண்டிவிட்டார் - அவர்
சாதிக்க பலபேரை தூண்டிவிட்டார்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Mar-14, 6:31 am)
பார்வை : 230

மேலே