தூக்கணாங்குருவி கூடு

கோதி கோதி உரித்த
நார் அலகுகளில்
கொத்திக் கொண்டு
வந்தேன்

ஒன்று ஒன்றாய்
அழகாய் சேர்த்து
ஒட்டி ஒட்டிப் பின்னி
ஒப்பேத்தி விட்டேன்

நாரிலையில் ஒரு கூடு
நாங்கள் வாழ நாறிடாத வீடு

பொறியியல் படிக்காமலே
கச்சிதமான கட்டிட
வேலைப்பாடு நிறைந்தது
தூக்கனாங் குருவி கூடு

நங்கூரமிட்டு தொங்குகிற
நயமான வீடு
அழகிய தோட்டங்கள் மேலே
அசைந்தாடும் வீடு

வண்டுகள் இல்லாத மூங்கில்
காட்டிலே ஊமையாய் திரிகின்ற
தென்றலும் இங்கு வந்தால்
களிப்புடனே ஊஞ்சல் ஆட்டம்

கதவுகள் இல்லாத நிலை
கவலைகள் கொண்டதில்லை
சன்னல்களும் இங்கு இல்லை
சற்று சகித்துக் கொள்ளவேணும்

பின்னல்களும் உண்டு
சற்றும் பேதலித்ததில்லை
அவ்வழியே மங்காத வெளிச்சம்
மாறி மாறி உள்ளே தெரிக்கும்

குஞ்சுகளை ஏந்தியும்
குலவைகளும் இட்டு
குதூகலிப்பும், நிம்மதியும்
நேர்த்தியான வாழ்வு

சுற்றங்களும் உண்டு
சூழ்ச்சிகளோ இல்லை
பற்றியதோ வாழ்க்கை
பசுமை நிறைந்த வாழ்க்கை

தொங்கியாடும் வீட்டினுல்
தூக்கனாங் குருவியின்
"வாழ்க்கை"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 10:16 pm)
பார்வை : 821

மேலே