நான் நன்றி சொல்வேன்

வான் கொடுத்த நீரை உறிஞ்சிய
மண்ணிது காட்டும் நன்றியே பயிர்கள்;
பயிர் கொடுக்கும் பலனை உண்டு
உயிர்கள் நீட்டும் நன்றியே விதைத்தல்;
விதையாம் ஆன்மாவைப் போர்த்திப் பேணி
உடல் காட்டும் நன்றியே மரித்தல்;
மரித்து முப்புறக் கடலிலும் உப்பது
முக நுரையில் தன் நன்றியைக் காட்டும்;
காட்ட இயலாத இறைவனைப் பார்த்து
ஏன் படைத்தாய் என்று கேட்காமல்
கேட்டாலும் கிடைக்காத இந்தப் பிறவியில்
கொடைகளுக்கு நான் நன்றி சொல்வேன்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (10-Mar-14, 12:32 pm)
Tanglish : naan nandri solven
பார்வை : 100

மேலே