உன் இரவின் மடியில

அந்த இரவிலும்
உன் கண்களை எதிர் கொள்வது
அவ்வளவு கடினமானதாய்
இருக்கவே
உன் உடலின் வாசனை சென்ற
தடங்களை
என் மூச்சுக் காற்றின்
பாதைகளாக்கி
அடங்காது திமிறும்
உன் இரவின் மடியில்
ஒரு குழந்தையாய் பயணித்துக்
கொண்டிருந்தேன்!
இரண்டு தீப்பந்துகளின் உரசலில்
உண்டான வெப்பத்தில்
உருகி ஓடிக் கொண்டிருந்தேன்
நம் ரகசிய வழியில் !!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (10-Mar-14, 12:15 pm)
பார்வை : 118

மேலே