நினைத்தவையும் நீர்த்தன ​

எண்ணங்களை எழுதிட நினைத்தேன்
வண்ணமுடன் தீட்டிட நினைத்தேன் !

ஏக்கங்களை எரித்திட நினைத்தேன்
ஆக்கங்களை அளித்திட நினைத்தேன் !

உள்ளத்தை கொட்டிட நினைத்தேன்
உண்மையை உரைத்திட நினைத்தேன் !

​உணர்வுகளை விதைத்திட நினைத்தேன்
விதைத்தவை விளைந்திட நினைத்தேன் !

ஒற்றுமையே என்றும் ஓங்கிட நினைத்தேன்
அமைதியே என்றும் நிலவிட நினைத்தேன் !

நினைத்து நினைத்து களைத்து போனேன்
நினைவில் நின்றதும் கலைந்து நின்றேன் !

நினைத்தவையும் நீர்த்து கரைந்தன
நீர்த்தவையும் நிலைகாமல் மறைந்தன !

கரைந்த நீரால் வண்ணமும் கலைந்தது
கரைசேரா எண்ணங்களும் மறைந்தது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Mar-14, 3:02 pm)
பார்வை : 305

மேலே