என் நிழலே

கலங்கிய உள்ளதை கருபிண்டமாக்க
நினைத்த கணத்தில்
கண் தான் கலங்கியது
கருத்து அல்ல என்ற எண்ணத்தை
உன் பார்வைக்கு உணர்த்த
உரு கொண்ட என் உடலை
கருக்கி தான் காட்ட முடிந்தது ...............
கருகிய நானோ கடவுள் கண்ட நீயோ யார்?
உடல் தான் உருவம் என்று நினைத்தாய் நீ
உண்மை தான் உறவென்று நினைத்தேன் நான் ////
பரிமாறி கொண்டேன்
என் உண்மையை உன் உண்மை உறவுக்காக
பரிமாறிய வேளையோ
எமனின் விருப்பனான நேரமாய் மாற
நான் கருகியதும் உயிர் போனதே என் உண்மையே/
உண்மை என்றும் உயிர் தான் உறவு இல்லை என்று உன் கனவில் நான் சொல்ல
உண்மையே நீ தான் என்று சொன்னாய்
இப்போது தான் தெரிந்ததா என்று நான் கேட்டேன்
ஆமாம் என்று சொன்னதும்
உன் உண்மையான உயிரும் போனதே
இப்போது நீயும் உண்மைதான் என் நிழலே .........

எழுதியவர் : சுபாகலை (10-Mar-14, 7:57 pm)
Tanglish : en nilale
பார்வை : 437

மேலே