திட்டினாலும் எனக்குப் பிடிக்கும்

குறைகள்
எனக்குப் பிடிக்கும்
நிறைநோக்குப் பார்வை கொடுக்குமெனில்..!!

கோபம்
கொஞ்சம் பிடிக்கும்
கொடுஞ்சொற்கள் இல்லாதிருக்குமெனில்..!!

திருடனை
மிகவும் பிடிக்கும்
மனதினை திருடிச் சென்றால்..!!

எதிரியை
எதிர்க்கப் பிடிக்குக்
நேர்கொண்டு எதிர்த்து நின்றால்..!!

தோல்விகள்
எல்லாம் பிடிக்கும்
படிப்பினை எனக்குத் தந்தால்..!!

துரோகம்
கூடப் பிடிக்கும்
பொய்யாக நானிருந்தால்..!!

உதிரம்
காணப் பிடிக்கும்
தானம் கொடுக்கும் இடத்தில்..!!

வெட்டிவிட
எனக்குப் பிடிக்கும்
வேண்டாத ஒரு நட்பை..!!

கொட்டுகள்
எனக்குப் பிடிக்கும்
அதில் நான் வளர்வேன் என்றால்..!!

கொலையும்
எனக்குப் பிடிக்கும்
அவள் என்னை அன்பால் கொன்றால்..!!

திட்டினாலும்
எனக்குப் பிடிக்கும்
தாயுள்ளம் கொண்டு திட்டுவீரென்றால்..!!

மரியாதை குறைவும்
அப்படிப் பிடிக்கும்
மனம் திறந்த பாராட்டாய் வந்ததென்றால்..!!

தப்புகள் எல்லாம்
எனக்குப் பிடிக்கும்
தப்பானதொரு பொருள் தராத வரை..!!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Mar-14, 10:56 pm)
பார்வை : 325

மேலே