புன்னகைப்போரிடம்
ஆழ்மனதின்
வருத்தம் வெளியே
தெரியாமல் பொத்தி பொத்தி வைத்து
புன்னகைப்போரிடம் புன்னகை.....
சிரிப்பவரிடம் சிரிப்பு...
மனக்குமுறல்களை
அணை போட்டு
கட்டி வைத்திருப்பதால்
பார்ப்பவர் அனைவரிடமும்
வாங்கிய ஒரே பெயர்
சிரித்த முகம்...சீதேவி
என்ற சிறப்பு பட்டம்...
ஆனால் என்றேனும்
ஓர் நாள் தெரிய வரும்...
ரத்தக் குழாய்களில் ஏற்படும்
அழுத்தம் தாங்காமல்
நரம்புகள் சிதறும் அளவு.....
இதய அடைப்பு வரும் போது
எத்தனை வேதனை சுமந்தேன் என்பது??