ஓட்டைப்பல் தேவதை

இன்று பச்சை பட்டுத்துணி தேவதை ஒன்றை அணிந்து பேருந்தின் படியேறியது..,
தேவதை என் மடியில் அமர்ந்த கணம் பேருந்து மகிழ்வுந்தாயிருந்தது.,
நான் -- "பேரு எந்தா மோளே.,"
அவள் -- கையில் வைத்திருந்த பொம்மையுடன் "தோரா" என்றாள்,
நான் -- "ஞான் விழிச்சது மொளினிடே பேரா"..
அவள் -- "யாழிலி" சேட்டா..,!!???
யாழினியின் சிறகுகளை தேடி களைத்திருந்தேன் நான் ..,
வீடோ ., பஸ்ஸோ.,ட்ரைனோ மழைநேர ஜன்னல்கள் எனக்கு எப்போதும் சுவாரஸ்யமானவை.,
அவளுக்கும் கூட ., !!!
திடிரென ஜன்னல் கம்பி மோதி தெறிக்கும் மழைத்துளிகளை பிடிக்க எத்தனிக்கையில் கண்டுபிடித்துவிட்டேன் உள்ளங்கையில் ஒளித்துவைத்திருந்த அவளின் சிறகுகளை..,
இறங்கும்பொழுது அவளை சுமந்த கடனுக்காக ஓட்டை பல் நிறைந்த புன்னகையுடன் சிறகையும் எனக்காய் விட்டுசென்றாளோ என்னவோ .??
தெறிக்கும் துளிகளை பிடித்தபடி நானும் ..,!!

எழுதியவர் : தொப்புளான் சாந்தகுமார் (10-Mar-14, 11:44 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே