நினைவே ,,,,,,
நான் அமைதி ஊர்வலம் போகிறேன்
என் கல்லறையில்
என் நினைவை சுமந்து வந்த
என் அன்பான அன்பானவர்களின்
கைகளில் மெழுகுவர்த்தி தீப்பற்றி எரிகிறது
நானோ அடங்கி விட்டேன்
என் அமைதி அறையில்.....
தீபத்தை ஏற்றியவர்கள் கண்களில் கண்ணீர்
நானோ சந்தோசமாக இருக்கிறேன் அவர்களின் நினைவுகளில்
பெற்றவர்கள் என்னை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள்
அவர்களின் நினைவுகளோ
என் கொலுசுகளின் சத்தமானது
அவர்களுக்கு தெரியாது
அவர்களின் கருவிழிகளில் தான்
நன் வாழ்கிறேன் என்று .......
------- கலை சுபா