அம்மாவின் அழைப்பு

உன் வருகைக்காகவே
காத்திருக்கிறேன் அன்பே...

உன் முகம் பார்க்கவே
விழி திறக்கிறேன் அன்பே...

உன் விரல் தீண்டவே
வேண்டுகிறேன் அன்பே...

உன் முத்தத்தில் நனைய
விழைகிறேன் அன்பே...

உன் மழலைச்சொல் கேட்க
செவி மடுக்கிறேன் அன்பே...

அன்பே
இத்தனை ஆசைகளையும்

உன்னோடு சுமந்து
உனக்காகவே காத்திருக்கிறேன்...

எழுதியவர் : சந்திரகார்த்திகா (11-Mar-14, 1:24 pm)
Tanglish : ammaavin azhaippu
பார்வை : 474

மேலே