தண்ணீர் குடம் கொண்டு உடைத்தாய் -சே பா
மகனே!
உன்னை பத்து திங்கள்
என் கருவறை இருட்டில்
தவிக்க விட்டேனோ!
உன்னை காண
அந்த பத்து திங்கள்
நான் பட்ட பாடு
உனக்கு தெரியுமோ?
உன்னை சுமக்கும் போது
படுக்கையில் என் விருப்பத்தில்
தூங்க முடியாது ...
விரும்பிய சில
உணவுகளை
வெறுத்து விட்டேன்
உனக்காக...
புளிப்பு சுவையாய்
புதுவிதமாய்
தந்தவன் நீ!
எதற்கும் ஆசை படாத
என்னை மாம்பிஞ்சுக்கு
ஆசைப்பட வைத்தாய்.
உன் சிறு நீர் கொண்டு
என் மடியினையும்
உன் எச்சில்லை கொண்டு
என் மார்பினையும்
நனைத்தவன் நீ!
மங்கை பருவத்தினை
அன்னை பருவத்திற்கு
அழைத்து சென்றவன் நீ!
அத்தனை சோகங்களையும்
உன் பொன்சிரிப்பு கொண்டு
சிறைவைத்தவன் நீ!
என் வாழ்கையில்
மலடி என்னும்
வார்த்தையை தண்ணீர்
(குடம்) கொண்டு உடைத்தவன் நீ!
நன்றி மகனே!
என்றும் அன்புடன் ,,,,,,,