ஒரு மனைவியின் அங்கலாய்ப்பு

காலைக் கண்விழித்து
காலைக்கடன் முடித்து
ஒருகையில் சூடாய்தேநீர்
மறுகையில் செய்தித்தாள் !

பரபரப்பு வேளைதனில்
வேலைபகிர மனமிராது
பிள்ளையரின் சண்டைகூட
போக்கிவிட தெரியாது !

சத்தம்வந்தால் அதட்டி
கத்திதிட்டத் தெரியும் !
நித்தம்இது நடக்கும்
வெளியசொன்னா வெட்கம் !

சேதிபடித்து முடித்திடில்
கைபேசி கைகொடுக்கும்
குருஞ்சேதி அலைபாயும்
வெட்டிப்பேச்சு ஆரம்பிக்கும் !

மணிஎட்டைத் தாண்டிடிலோ
அரக்கப்பறக்க குளியல்போட்டு
அடுக்கியதுணி கலைத்துப்போட்டு
அலுவலகம் கிளம்பும் !

அடுக்களையில் அணங்குக்கு
ஆயிரம்வேலை இருப்பினும்
அதட்டலோடு அதிகாரம்பண்ணி
சாப்பிட்டு விடைபெறும் !

பணிமுடிந்து வந்தபின்னும்
பழையபல்லவியே தொடரும்
தொலைக்காட்சியில் செய்தி
அலைபேசி அளவளாவல் !

நிம்மதியாய் இரவுணவு
சுகமான படுக்கை
கடமைக்கு உறவு
என்னசொகுசான வாழ்க்கை !

அடுத்த பிறவியில்
நான் நீயாக நீ நானாகப் பிறந்து
அனுபவிப்பேன் அத்தனையும்
அதற்கெனக்கு வேணுமொருபிறவி ...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (11-Mar-14, 5:35 pm)
பார்வை : 96

மேலே