எங்கே எனது கனவு
காதல் கொள்ளாதவன்
கனவை
விண்வெளியில் தேடுவான்
நிஜமும் நிலையும அவனுள்ளே
கேட்கிறான் மதியிடம்
கனவே என்னுள் வாராயோ
காதல் கொண்டவனோ
கனவை
நாள் முழுதும் காணுவான்
நிஜம் முன்னிருக்க நிலை கனவுக்குள்ளே
காதலி இவன் முன்னே வர
கேட்கிறான் காதலியிடம்
கனவே என்னுள் வாராயோ
-இப்படிக்கு முதல்பக்கம்