விலைவாசி
![](https://eluthu.com/images/loading.gif)
இரவு நேரத்து கொள்ளைகாரனாய்
அரசும் அறிவித்து விட்டது
நள்ளிரவு முதல் ஏற்றப்படுகிறது
பொருட்களுக்கான விலை உயர்வு
தூக்கம் கலைந்து தவித்து நிற்கும்
தூண்டில் சிக்குண்ட மீனாய்
குடும்ப தலைவனும், தலைவியும்
நாளை விடியும் காலையை சமாளிக்க
எல்லாப் பொருளுக்கும் விலை உயர்வு
ஏழையின் வயிற்றில் மட்டுமே பசி உயர்வு
ஏழையின் சிரிப்பை கண்ணீராக்கி
என்றுமே நகர்கிறது விலைவாசி
நிலவில் இடம் வாங்குகின்றனராம்
நிலக்கடலை கூட ஏழை இங்கு
வாங்க முடியவில்லை - அடுப்பு எரிக்க
விறகு கூட வாங்க முடியவில்லை
கடைசியில் என்ன ஆச்சு
குடும்ப தலைவியின் தாழி
இடமும் மாறி மாறியே
அடகு கடைக்கும் போயாச்சி
ஆளுக்கொரு கட்சி வச்சி
அரசியல் போர் நடத்துறாங்க
ஆனால் மாட்டிக் கொண்டது
நானும், நீங்களும் தாங்க
நடுத்தர வர்க்கம் எல்லாம்
நடு ரோட்டுக்கே வந்தாச்சி
விலை உயர்வை எண்ணியே
விழி பிதுங்கியே நின்னாச்சி
மாறி மாறி ஏறிப்போச்சி
நாட்டின் விலைவாசி
கேட்டால் அரசியல் கஜான
மட்டும் காலியாகிப் போச்சி
ஏழை கழுத்தை நோக்கி கயிறு
வீசுகின்ற எமனாய் விலைவாசி
ஏழை வாழ்வு இப்ப நடு ரோட்டுக்கு
இது நீண்டால் தஞ்சம் சுடு காட்டுக்கு
மலை என்ற விலைவாசி
உளி கொண்டு செதுக்கும் நாள்
என்று தான் வருமோ....