புத்தனின் மரம்

ஒரு பொழுதும் நாம் உணர்ந்ததில்லை
இன்று நாம் வெட்டும் மரங்கள்
நம் பாவத்தின் பொருட்டு அடுத்த தலைமுறை சுமக்கப்போகும் சிலுவைகள் என்று..!!
பிராணவாயு பாட்டில்களில் கிடைக்கும்
இனி வரும் காலங்களில்
ஒருவேளை புத்தன் பிறக்கலாம்.,
அறிவதற்கில்லை..!!
மழைக்காக இல்லையெனினும்
ஒரு மரமாவது விட்டுச்செல்லுதல் நலம்,
அவன் ஞானம் அடைய..