உண்மையொளி ஒளிந்திருப்பது உனக்குள்ளேதான்

உண்மையொளி ஒளிந்திருப்ப துனக்குள்ளேதான்! - அதை
உணர்ந்துகொண்டு மூடியுள்ள இருளைக் கிழித்து

பெண்மையொரு தாய்நிலையில் குழந்தைதன்னை - ஊட்டிப்
பேணுதல்போல் ஒளிதன்னைப் பேணவேண்டும்!

இருள் பரவிஊறுமிந்தப் பிரபஞ்சத்தில் -
ஒளியை
இருகரத்தில் பொதிந்தேதான் காக்க வேண்டும்!

இருளாலே இருளேற்ற முடியாதம்மா! -
ஆனால்
இருக்குமொளித் துளியேற்றும் கோடித்தீபம்!

இருக்கும் அந்தத் துளியொளியைக் கையால் பொதிந்து - கொஞ்சம்
எண்ணெயிடு தோன்றுமங்கே ஜோதிரூபம்!
--------- சித்திரைச் சந்திரன்

எழுதியவர் : செல்வப் ப்ரியா (சித்திரைச (12-Mar-14, 3:11 pm)
பார்வை : 101

மேலே