ஷேக்ஸ்பியரின் மேடையில்

நான் நடக்கிறேன்
ஷேக்ஸ்பியர் சொன்ன
உலக நாடக மேடையில்
சில சமயம் பாத்திரமாக
சில சமயம் பார்வையாளனாக
சில சமயங்களில் இரண்டுமாக !
நான்
நடக்கிறேன் நடிக்கிறேன்.
இரவு பகல் என்று சுழலும்
இந்த நாடக மேடையில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-14, 5:05 pm)
பார்வை : 382

மேலே