குப்பைத் தொட்டி என்பது நமது கவலைகளை நிரப்பவே

சுற்றிப் பார்த்தால் சொர்க்கம் உண்டு
சுகமே வழங்க நொடிகள் உண்டு -

பார்க்கும் திசையை கொஞ்சம் மாற்றினால்
பகலவன் ஒளியிலும் பவுர்ணமி உண்டு....

மனத்தால் வட்டமாய் தோரணம் செய்து
மல்லிகைப் பந்தல் கட்டுவோம் நாமும்....- இனி

சுட்டுப் பொசுக்க சூரியன் இல்லை
சுகமாய் வீச மணமாய் தென்றல்......

தூரக் கொட்டுவோம் கவலையை நிறைய - இதோ
தூய்மையாய் இருக்கே குப்பைத் தொட்டி....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-Mar-14, 5:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே