யாருக்கு வாக்கு

யாருக்கு வாக்கு ?
-----------------------------

யாருக்கு வாக்கு ..?
யாருக்கு வாக்கு.....?
அய்யோ ..! அய்யயோ..!
அய்யாவும் சரியில்ல.
அம்மாவும் சரியில்ல.
அவரும் தாவுறாரு
இவரும் மிதக்கிறாரு.

இதப்பாரு இவரைப்பாரு
நடிகரை பாரு
நாக்கை கடிக்கிறாரு.
நாயா அலைகிறாரு
வாக்கை கேட்பாரு
வழக்கை சந்திப்பாரு.

வக்கீலு கோபால பாரு
வீரவேசத்துல மன்னாரு பாரு
எல்லாம் வெளிவேசம் பாரு..!

அஞ்சுவிரலு விரியுது பாரு
அதுல வாரிசு ஆசையை பாரு
ரெட்டை விரல பாரு.
அதுல ஈழத்தாய் வேஷம் பாரு.
சுத்தியலும் அரிவாலும் பாரு
இது சுத்தமா ஆகாது பாரு.

அங்கப்பாரு மாம்பழம்
முட்டிய முரசுகிட்ட ஜோடியை பாரு
தாமரை மேடையில ஆடுது பாரு
காதுலபூ வைக்க ஓடிவருது பாரு.
தமிழனே ! உஷாரு ! உஷாரு..!

அச்சச்சோ ..! மறந்துபுட்டேன் பாரு..!
அங்க பாரு ..! அனாதை கையை பாரு
அய்யோய்யோ...!
அத பாக்காதே....!
அத பாக்காதே.......!
நம்ம சனங்கள கொன்ன
கொலைக்கார கை அது
நாசாமா போகும் பாரு..!

யாருக்கு உன் வாக்கு
யோசித்து பாரு
நாளை உம் பிள்ளைக
நிலமையை நினைச்சுப்பாரு
யாருக்கு உன் வாக்கு ?

நோட்டா-வை நோட்டமிடுகிறதா
உம்ம கண்ணு..? -ஐயோ..!
நீ அறிவு கொழுந்து..!

----------------------------இரா.சந்தோஷ் குமார்.
------------------------------------------------------------------

* நோட்டா = இது மிண்ணனு வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியலோடு விருப்ப தேர்வாக இதுவும் இருக்கும். யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்றால் இதனை தேர்வு செய்து ஜனநாயக கடமையை ஆற்றலாம்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (12-Mar-14, 5:53 pm)
Tanglish : yaruku vaakku
பார்வை : 262

மேலே