மறந்துவிடாதே மானிடா

பொய்யான இவ்வுலகில்

உண்மைகள் வலிந்திருக்கும்
பொய்கள் மிகுந்திருக்கும்

உறவுகள் கூடவரும்
உண்மைகள் இருக்காது

நட்புக்கள் பெருகியிருக்கும்
துரோகங்கள் குறையாது

காதலர் பெருகியிருப்பார்கள்
காதல் இருக்காது

பெற்றவள் கூட பிள்ளையை விற்பாள் !
தாய்மை இருக்காது

பிள்ளை மனம் பித்து
பெற்றமனம் கல்லாகும்

பெண்ணுக்கு நிகராக ஆண் வளரவேண்டும் என்பான் நவீன பாரதி

மானம் தேவையில்லை
பணம் இருந்தால் போதும்

நட்பு தேவையில்லை
பணமிருந்தால் போதும்

உறவு தேவையில்லை
பணமிருந்தால் போதும்

பாசம் தேவையில்லை
பணமிருந்தால் போதும்

உண்மை தேவையில்லை
பணமிருந்தால் போதும்

பணம் ...பணம்...பணம்...

பணத்தைவிடவும் நல்ல உறவுகள் உள்ளது என்பதை மறந்துவிடாதே மானிடா!...

எழுதியவர் : TP Thanesh (12-Mar-14, 6:28 pm)
சேர்த்தது : TP தனேஷ்
Tanglish : naaveena ulagap
பார்வை : 162

மேலே