அடங்கிவிடும்
ஆழ் கடல் அடங்கும் ...
ஆர்ப்பரிக்கும் அலைகளின்
கர்வம் ....
தேனீயின்
வாய் வழி அடங்கும்
பூவுக்குள் திமிரும்
தேனின் கர்வம் .....
அமாவாசை இரவில் அடங்கும்...
வசீகர
நிலவின் கர்வம் ...
வரட்சியில் அடங்கும் ....
பச்சைப் பசேல் ..
வயலின் கர்வம் ...
மாலையின் மயக்கத்தில் அடங்கும்
சுட்டெரிக்கும்
சூரிய கர்வம் ....
சில நொடி மூச்சடைக்க .....
அடங்கிவிடும்
அராஜக மனிதனின்
கர்வம் ....

