இரு துருவங்கள்
கிழிந்த கூரை
கிராமத்து நிலவு
காதலர்களின் பார்வையால்
அலங்கரித்து
இளிக்கிறது
மறைத்த மாடம்
நகரத்து நிலவு
எந்திரங்களின் புன்னகையால்
கலையிழந்து
மிதக்கிறது
*
தேனியின் சீனி
தாளி கொண்ட
தேவ மகள் மேனி
தீட்டய வெல்லம்
மேனி கொண்ட
பாவ மகள் உள்ளம்
உடலுக்கு எது நல்லது
அதை நீ அறிந்திடு
உளமாற உட்படுத்திடு
*
பழைய ஓலை
பதித்த எழுத்து
புரியவில்லை
இழந்ததென்ன
புதியதோர் பேப்பர்
புரிந்துகொண்டேன்
இழந்தது இந்த
அறை லிட்டர் தண்ணீர்
*
கட்டவிழ்த்த காற்று
தொட்டு வந்த பூக்கள்
பட்டு வளந்த காடு
பட்டு வந்த போது
பொத்து வரும் ஊற்றாய்
இட்டு விடும் வாசம்
கட்டிவைத்த காற்று
கட்டிடத்து பூட்டு
மாட்டிக்கொண்ட மனிதன்
கிட்ட தட்ட (சு)வாசம்
கெட்டு விட்ட நாசி
போட்டு வைத்த ஏசி