காத்திருப்பேன்

வானம் பொய்த்தாலும்
புவி தன் ஈர்ப்பை குறைப்பதில்லை
வண்டு வர மறந்தாலும்
கொடிகள் பூப்பதை மறப்பதில்லை
நீ காணாவிட்டாலும்
உன் மீதான என் காதல் மறைவதில்லை
தன் இணைக்காக காத்திருக்கும்
நிலவை போல...
நானும் காத்திருப்பேன் உனக்காக .....................

எழுதியவர் : தேன்மொழி (13-Mar-14, 3:23 pm)
Tanglish : kaathirupen
பார்வை : 83

மேலே