முத்தம்

காதலின் மொழி,
அன்பின் மொழி,
சத்தத்தை மற்றுமே கொண்ட மொழி,
எல்லா நாட்டவர்க்கும் பொதுவான மொழி.

சிலர்க்கு ஆயுதம்,
சிலர்க்கு காணிக்கை .

பொதுவாக இருவர்மட்டுமே பங்குபெறும் விளையாட்டு.

பலவித உணர்வுகளாகிய,
காதல்,
அன்பு,
தாய்மை,
ஆனந்தம், ஆகியவற்றின் வெளிப்பாடு.

இதில் வகை தொகை கிடையாது.

இதுவும் ஒருவகை பண்டமாற்றுதான்,
மாற்றப்படுவது ஒரே பண்டம்தான்.

எழுதியவர் : பிரசன்னா (13-Mar-14, 2:50 pm)
பார்வை : 102

மேலே