எழுத்துக்கு நன்றி

என் பக்கம் செயலில்லை
ஏன் என்று புரியவில்லை
ஏக்கமாய் காத்திருந்தேன்
ஈரிரண்டு நாட்களாய்

கவி படிக்கத் துடித்தது எண்ணம்
கவி எழுதத் தவித்தது விரல்கள்
தாகமாய் காத்திருந்தேன்
தனிமையாய் சிந்தனையில்

குற்றம் செய்தேனா எழுத்துக்கு?
குறையேதும் கூறினேனா நண்பருக்கு?
கலவரமானேன் அவசரமாய்!
குழப்பமாய் என் நினைவில்

தளம் இழக்க வேண்டுமோ?
தமிழ் சுவைக்க முடியாதோ?
தரம் கெட்டுப் போனதோ என் கவி?
துயரமாய் என் நினைவலைகள்

ஒலித்தது செல்லிடை மணி
எழுத்தின் ஓசை மதுர கானமாய்
ஔிர்ந்தது என் உள்ளம்
செயல்படத் தொடங்கியது என் பக்கம்

நன்றிகள் பல எழுத்துக்கு
நயமாய் உங்கள் பணிக்கு

எழுதியவர் : ஜவ்ஹர் (13-Mar-14, 6:27 pm)
Tanglish : eluthukku nandri
பார்வை : 124

மேலே