மனைவிக்காக

மனைவிக்காக....
முகம் கண்டு
காதல் கொண்டு
மணம் முடித்து
கூடல் இன்பத்தில்
இளமை தேடல்
நிறைவேறினாலும்
நிறைவேறாது அன்பே..!
உன் மீதுள்ள
என் காதல்..!
ஆசைக்கும் மோகத்திற்கும்
நாட்கள் எல்லையுண்டாம்..!
மனைவியை ரசிக்க தெரியா
மடையர்களின் புலம்பல்கள் அது..!
காமத்திற்கும் சதைக்கும்
எழுதப்பட்ட வாக்கியம் அது.
அன்பே...!
மூடர்களுக்கு எப்படி தெரியும் ?
கட்டிலும் தொட்டிலும்
குடும்பம் என்றவர்களுக்கு
காதலில் காமம்
மட்டுந்தானே தெரியும்.
மனைவியே........! என்
மனதின் துணைவியே...!
வா...!
உன்னிடமிருக்கும் என்னையும்
என்னிடமிருக்கும் உன்னையும்
ஆராய்ந்து, அனுபவித்து
அனுசரித்து, அர்ப்பணிந்து
விட்டு விலகாமல்
விலகியும் விலகாமல்
உன் கையில்
என் விரல் முளைத்து
எழுதப்பட வேண்டும்
இல்லற காவியம் ..!
பெருகும் காதலில்
வரும் காமம் கூட
வெறும் உடல்கள்
பேசும் ஊமைமொழிதானே..!
அந்த ஊமைமொழியினை
பேசிக் கொண்டே
நம்மிருவரின் உள்ளங்கள்
பேசும் உண்மையான
காதல் மொழியினை
நீயும் நானும் அனுபவித்து
ஆயிரம் காலத்து பயிரினை
அறுவடை செய்வோம் வா..!
-----------------------இரா.சந்தோஷ் குமார்