நீ தொலைத்த நான்
அன்பென்ற அமுதை
ஆயிரம் முறை கொடுத்தேன்
நஞ்சென்று நினைத்து
நகர்ந்து சென்றாய்!!!
மஞ்ச கனவுமட்டும்
நெஞ்ச கடலில் !!!
எத்தனை நாளாய்
காத்திருந்தேன்
அத்தனையும் வீண்தானோ???
உன்னை மறக்க முயல்கிறேன் இப்போதும்
மடிந்து கிடக்கிறது "ஈழ தமிழினமாய்"- என் காதல்
கண்டும் காணாத தமிழகமாய் நீ!!!!
எப்படி சொல்வேன் எல்லாம் கைமீறி விட்டது
எங்கோ சென்றுவிட்டாய் என்னை மறந்து
எப்படியோ வாழப்போகிறாய் எனை துறந்து
என்னவெல்லாம் காணபோகிறாய் எனை கடந்து
எண்ணம் எங்கிலும் நீரோட்டம் அதன்
வண்ண கலவையாய் கண்ணீர்
துடைத்து வைக்கிறான் இன்னொருவன் -
என் தூரத்து சொந்தமாம்!!!!!!!!!
காலம் சொன்ன பாடம் புரியவில்லை
நீ சொன்ன வேதமும் புரியவில்லை
நொடியெல்லாம் மணியானது
நிமிடமெல்லாம் வருடமானது
இன்னும் மாறாமல் நீ
மறக்காமல் நான் !!!
என்று முடியும் இந்த போராட்டம்
இன்றும் தொடரும் இந்த நீரோட்டம்!!!!!!!!!