நாலுக்கால் புத்தி

நாலுக்கால் புத்தி

சிற்றிதழ் திறவுகோலின் தூண்டுதலுக்குப்பின்பே
துளிர்க்கின்றது ஒரு பச்சைநெடி
பிடிக்கட்டுத்தாம்பூலம் இளந்தட்டில் நிறைபரப்பி
இளந்தென்றல் பொதிய

தெளிந்த நீரோடையின் நெகிளிப்பொன்றின்
கைத்துணைக்கெட்டா தவிப்புகளினோடு
கீழ்நோக்கி படையெடுத்த
சாய்த்தென்னங்கீற்றுகள்
இன்னும் நியந்தரணந் தவறாதிருக்கின்றது

சங்கிலிமல்லிகைப்பாயலில்
ஒத்திகைசூட
கண்திறந்த ஸ்வரமுகூர்த்தம்
ஒளியா வெற்றிக்களிப்பின்
மனநிவர்த்தியின் விளிம்பில் எத்திடும்போது

தோல்விகளின்மேற்சரிந்த
கீர்த்தனங்களின் துளிகளெல்லாம்
சுவாச சாலைகளில்
தலையூரி முட்களாகின்றது

பறித்தபுன்னகையின் அன்றையசேமிப்புகள்
ஆவேசங்களினோடும் நிராசைகளினோடும்
மென்சோகங்களின் தனப்பார்வைப்பட

காதோர்த்த ஒற்றையிழையினால்
இழுத்துச்சென்ற நெஞ்சத்தேரொன்று
முச்சந்தியில் உலா வருகின்றது

விவரந்தெரிந்த நாள்முதலாக
ஒற்றைக்குளத்தில்
கணுக்கால்கள் விதைத்து
குட்டிமீன்கள் பிடிக்கசிரமித்து
தோற்று தோற்று இதழ்ச்சுழிக்கின்ற

அந்த பௌர்ணமிநாளின்
உன் நித்தியரூபத்தின்முன்னால்
மருங்கியவனாக
சொல்லாமற்நின்றவேளைகள் ஏராளம்

பிரபந்தங்கையாளும்
மரபியல் மறக்கின்றது
தவறுகளைத்தாண்டிய கட்டங்கள்

நீ பசுமையெரிக்கின்ற வேள்விதுலக்கி
படிகளேறும் வழக்குகளில்
என் பிரயாசைகள் முடங்கி
கனக்கிரீடம் இறங்கிக்கொண்டேவருகின்றது

யாருக்குந்தெரியாத அந்த சாபம்
படிப்படியாக நெருங்கி
நிலைதப்பச்செய்து சுழற்றியடித்தது
ஒன்றின் பின்னால் மற்றொன்றாக

தீரவில்லையொன்றும்
எந்த கங்கையில் மூழ்கியப்பொழுதும்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (14-Mar-14, 5:28 am)
பார்வை : 97

மேலே