சம நிலை கொண்ட எண்ணங்கள்

ஒற்றுமை நம்மிடம் இருந்தால்
உயர்வு தாழ்வு உருவில் மட்டும்...
வேற்றுமை நினைவில் இருந்தால்
வேதனையே வாழ்வில் கிட்டும்
சமத்துவம் என்று காண்போம் ? ஏ
சரித்திரமே ஒரு இடத்தைக் காட்டு....!!
ஆசையால் விளைந்தது இப்பாகுபாடு - உன்
ஆதாரங்கள் படித்தே இந்த எடுத்துக் காட்டு...!!
இந்நொடி என் நினைவு என்னோடு
அடுத்த நொடி என் கையை விட்டு அதுவும்....
எனவே
சமத்துவம் என்று காண்போம் ? ஏ
சரித்திரமே ஒரு இடத்தைக் காட்டு....!!