கவிதை மங்கை நான் என் தோழமையின் கவிதை
கவிதைக்காரி .......
அவள் நடந்து போன
பாதையெல்லாம் கவிதைப்
பூக்கள் மணம்விரித்து .....
சோலையாக பூத்து குலுங்கும்
அவள் கூந்தலிலும் மயிலிறகாய்
பேரழகு வார்த்தைகளை
சரம சரமாய் சூடிக்கொண்டு
இதழ்களிலே இனிய கஜல் ..
இதம் இதமாய் மீட்டிக் கொண்டு
தேன் விழியில் நனைந்து வரும்
தென்றலாகப் புதுக்கவிதை ....
விழிமழையில் நனைந்து வரும்
நேசங்களின் ஒசைச்சுவை ...
இளங்கழுத்தில் அணிந்திருப்பாள்
செண்பகமாய் மலர்க்கவிதை ..
மல்லிகையின் மொட்டுக்களாய்
மார்பின் மீதும் சில கவிதை ...
சின்ன இடைதனிலே மரபுக்கவிதை
ஒன்று மௌனமாக அசைந்தாடும் ..
நடந்துவரும் சாயலிலே நளினமான
இளங்கவிதை...அவள் கரங்களிலும்
கவிதைப்பூக்கள் .சிதறாமல் கொண்டு
வந்தாள்.......மெல்ல மெல்ல இதழ்
விரித்த கவிதைப்பூக்கள் மனத்தினிலே
இதயம் வண்டாய்மாறி இங்கே
கவிதைக்காரி கூடக்கூட
பறந்து உலாப் போகிறதே ..