முடியாது உன்னால்

என்னை அறியமுடியும்
என் நிழலை அறியமுடியாது உன்னால்

என் கண்ணை பார்க்கமுடியும்
என் இதயத்தை பார்க்கமுடியாது உன்னால்

என் கவிகளை வாசிக்கமுடியும்
என் வலிகளை வாசிக்கமுடியாது உன்னால்

என் மொழிகளை சுவாசிக்கமுடியும்
என் பிழைகளை சுவாசிக்கமுடியாது உன்னால்

என் கனவுகளோடு கைகோர்க்கமுடியும்
என் நினைவுகளோடு கைகோர்க்கமுடியாது உன்னால்

என் பாதையில் வலம்வர முடியும்
என் பாடையில் வலமரமுடியாது உன்னால்

எழுதியவர் : susila (14-Mar-14, 2:43 pm)
சேர்த்தது : susila
Tanglish : mutiyaathu unnaal
பார்வை : 161

மேலே